மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

நக்சல் தாக்குதலில் 4 போலீஸார் சாவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் 4 போலீஸார் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

Updated On :13 மே 2013, 1:42 am IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் 4 போலீஸார் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

பஸ்தர் மாவட்டத்தில் உள்ள மரெங்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

அங்கிருந்த தூர்தர்ஷனின் ஒளிபரப்பு கோபுரத்தை நக்சலைட்டுகள் தகர்க்க முயற்சித்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இத்தாக்குதலை நக்சலைட்டுகள்தான் நடத்தினரா என்று உறுதியாகத் தெரியவில்லை என்று போலீஸ் இயக்குநர் ஜெனரல் ராம்நிவாஸ் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த காவலர் ராய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள 9 மற்றும் 13-வது பட்டாலியன் படைப் பிரிவு முகாம்களின் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சத்தீஸ்கர் ராணுவ படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.