காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இலவசமாக நாளிதழ் அளித்த 10 வயது சிறுவன் கெüசல் ஷக்யாவை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தத்தெடுத்தது.
கடந்த மாதம் 25-ம் தேதி போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய சிறுவன் கெüசல், நாளிதழ் வாங்கும்படி கேட்டுக் கொண்டான். நாளிதழ் வாங்கிக் கொண்டு, அதற்குக் கட்டணமாக ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார் ராகுல்.
அதற்கு அச்சிறுவன், தன்னிடம் சில்லறை இல்லை என்றும் அதனால் நாளிதழை இலவசமாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளான்.
இதில் நெகிழ்ந்துபோன ராகுல் காந்தி அச்சிறுவனிடம் சிறிது நேரம் உரையாடினார்.
அப்போது எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டதற்கு, நான் மருத்துவராவேன் என்று சிறுவன் பதில் அளித்துள்ளான். பின்னர் சிறுவனை வாழ்த்தி விட்டு அங்கிருந்து ராகுல் சென்று விட்டார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா அச்சிறுவனையும், அவனது தந்தையையும் போபாலில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்தார்.
அப்போது சிறுவனை பாராட்டிய பூரியா, கெளசலை காங்கிரஸ் தத்தெடுப்பதாக அறிவித்தார். சிறுவனின் படிப்புக்காக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அச்சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சிறுவனின் தந்தை துலிசந்த் ஷக்யாவுக்கு தனது கல்லூரியில் வேலை தருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சஜீத் அலி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


