47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேஸ்புக்கில் தனது ஆபாச படத்தை பார்த்த 18 வயது மாணவி தற்கொலை

பேஸ்புக்கில் செல்போன் எண்ணுடன் ஆபாசமாக தனது புகைப்படம் வெளியானதால் 18 வயது மாணவி தற்கொலை செய்து

News image
Updated On :26 ஜூன் 2014, 9:28 am

வேல்முருகன்

பேஸ்புக்கில் செல்போன் எண்ணுடன் ஆபாசமாக தனது புகைப்படம் வெளியானதால் 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கொல்கத்தாவின் பர்னாஸ்ரீயில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருடைய ஆபாச படம் சமூக வளைதளமான பேஸ்புக்கில் வெளியாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மாணவியின் படத்தை மார்பிங் செய்த அவரது ஆண் நண்பர் இம்ரான்கான், ஆபாசமாக வெளியிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளார் என்பது மாணவிக்கு தெரியவந்தது. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததை எண்ணி மனம் வெதும்பிய மாணவி,  அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன் தன் சாவுக்கு காரணம் என்று இம்ரான் கான் பெயரை குறிப்பிட்டு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், தற்கொலைக்கு காரணமான கைசல் இம்ரான் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் தீபக் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.