ஒரு 'தம்' தர மறுத்த அண்ணனை அடித்து கொன்ற 'டீன்-ஏஜ்' தம்பி

சிகரெட் புகைத்து கொண்டிருந்த அண்ணன் ஒரு 'தம்' தர மறுத்ததால், கோபமடைந்த தம்பி சமையல் பாத்திரத்தால் அடித்து கொலை செய்தார்.
ஒரு 'தம்' தர மறுத்த அண்ணனை அடித்து கொன்ற 'டீன்-ஏஜ்' தம்பி
Updated on
1 min read

சிகரெட் புகைத்து கொண்டிருந்த அண்ணன் ஒரு 'தம்' தர மறுத்ததால், கோபமடைந்த தம்பி சமையல் பாத்திரத்தால் அடித்து கொலை செய்தார்.

இந்தியாவின் ஏதாவது குக்கிராமத்தில் இச்செயல் நடைபெறவில்லை. இந்தியாவின் அனைத்து அதிகார பீடங்களும் உள்ள தலைநகர் தில்லியில்தான் இந்த 'சோக' சம்பவம் நடைபெற்றுள்ளது.

தில்லியின் மங்களபுரியில் P பிளாக் பகுதியில், நேற்று இரவு டியூசன் முடித்து வந்த இளைஞர் (16 வயது) ஒருவர் அங்கு தனது அண்ணன் சிகரெட் புகைத்து கொண்டிருப்பதைக் கண்டார். அவருக்கும் 'தம்'  அடிக்கும் ஆசை ஏற்பட்டது. அண்ணனிடம் சென்ற அவர் ஒரே ஒரு 'தம்' தருமாறு கேட்டறிந்தார்.

தம்பியின் மீது உள்ள பாசமோ என்னமோ, தம்பிக்கு 'தம்' தருவதற்கு  அண்ணன் மறுத்துவிட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தம்பி, அங்கிருந்த நீண்ட கம்பி கொண்ட பொரிக்கும் சட்டியை எடுத்து அண்ணனின் தலைமையில் சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அச்சகோதரர்களின் பெற்றோர், மூத்த மகன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு போலீஸார் தகவல் அளித்தனர். இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்த செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே அண்ணனிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீட்டுக்கு வந்த தம்பி, அண்ணன் சடலமாக கிடப்பதை கண்டு அழது கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் விவரித்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சிறார் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புவதற்கு  நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com