தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பொய்யை பரப்புகிறார் கேஜரிவால்: அருண் ஜேட்லி

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பொய்யை பரப்புகிறார் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 12:26 pm

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பொய்யை பரப்புகிறார் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

பொய் மற்றும் அவதூறை நம்பும் நபராக கேஜரிவால் உள்ளார் என்று கூறியுள்ள ஜேட்லி, கேஜரிவாலின் பேச்சுக்கள் வெறிப்பிடித்தவர் போன்று உள்ளன என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கேஜரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் தங்களை திருத்தி கொள்ள முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியினர், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜேட்லி தலைவராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகளை பட்டியலிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் 'சுதந்திரப் பேச்சு என்ற பெயரில் பொய்யை பரப்புதல்' என்ற தலைப்பில் முக நூலில் பதிவிட்டுள்ள ஜேட்லி, கேஜரிவாலை கடுமையாக தாக்கியுள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்கத்திலிருந்து 2013 ஆம் ஆண்டே விலகிவிட்ட தான் 2014, 15 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று வினவியுள்ளார் ஜேட்லி.

மேலும், சுதந்திரமான பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமைதான். ஆனால், அதன்படி பொய்யை பரப்பலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரியை பாதுகாக்கும் கேஜரிவால், அதை திசை திருப்பும் வகையில் தன் மீது வசைபாடி வருகிறார் என்றார் ஜேட்லி.

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள விசாணை குழு, எவ்வித முறைகேடும் இல்லை என கூறியுள்ளது என்றார் ஜேட்லி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.