தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்குக் குற்றவாளி நாசிக்கில் மரணம்

1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஷரிஃப் கஃபர் பார்க்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :18 டிசம்பர் 2015, 7:45 am

1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஷரிஃப் கஃபர் பார்க்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாசிக் ரோட் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த பார்க்கர் (80) நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு நாசிக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்ததாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் ரமேஷ் காம்ளே கூறியுள்ளார்.

2013ம் ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் பார்க்கர் சரண் அடைந்ததாகவும், மும்பை தொடர் குண்டு வெடிப்பில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், தீவிரவாதிகள் சந்தித்து சதி திட்டம் தீட்ட ஏற்பாடு செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்று நாசிக் சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வந்ததாகவும் ரமேஷ் காம்ளே கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.