தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விமானம் மூலம் கடத்தல்: ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இரு வேறு சம்பவங்களில் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :20 டிசம்பர் 2015, 2:04 pm

இரு வேறு சம்பவங்களில் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரின் கரிபுர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகாவினர் நடத்திய திடீர் சோதனையின் போது 2.116 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். எனினும், இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேபோல கொல்கத்தா விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இரு பயணிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து 1.36 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லவ்ப்ரீத் சிங், தர்மபால் சிங் என்ற அந்த இரு பயணிகளும் கைது செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர்.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 34.6 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.