பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தன்று நாட்டில் உள்ள 18 லட்சம் காவலர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்.
காவல் துறை இயக்குநர் முதல் காவலர் வரை பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் அவர் குறுஞ்செய்தி அனுப்பவிருப்பதாகத் தெரிகிறது.
குஜராத் மாநிலம் கட்ச் நகரில் அண்மையில் நிறைவுற்ற காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டில் உள்ள அனைத்து காவலர்களையும் தொடர்புகொள்ளுவதற்கு ஆசையை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து காவலர்களின் மொபைல் எண்களையும் சேகரிக்க அனைத்து காவல் துறை இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
வருகிற குடியரசு தினத்தன்று அனைத்து காவலர்களுக்கும் மோடி பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் பேசிய மோடி, அனைத்து காவலர்களும் யோகா பயிற்சி செய்யுமாறு ஆலோசனை வழங்கினார். தேவைப்பட்டால் காவல் நிலையங்களில் யோகா பயிற்சியாளரை நியமித்துக் கொள்ளலாம் என்றார்.
சமூக வலைத்தளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்துவதில் காவல் துறையினர் சுணக்கம் காட்டக் கூடாது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் காவலர்களை அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், செய்தியாளர்களை (காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள்) சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்துவதிலும் தயக்கம் காட்டக் கூடாது என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


