நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த நிர்பயாவின் பெற்றோர், சிறார் குற்றவாளி குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ள எத்தனை நிர்பயா சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்று கண்ணீரோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிர்பயா வழக்கில் மிக மோசமான குற்றங்களை செய்த குற்றவாளி சிறார் என்பதால் வெறும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிர்பயா விவகாரத்தில் மிக மோசமான குற்றங்களை இழந்த ஒரு குற்றவாளி, சிறார் என்ற காரணத்தால் விடுதலை செய்யப்படுவதால், அவனால் இந்த சமுதாயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி அவரது விடுதலையை நிர்பயா பெற்றோர் எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தான் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடரும் என்றும் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியுள்ளார்.
மெக்களின் நலன் பற்றி நீதிமன்றம் கவலைப்படவில்லை. இந்த போராட்டம் வெறும் நிர்பயாவுக்காக மட்டும் இல்லை, அனைத்து பெண்களுக்காகவும்தான், இதுபோன்ற ஒரு சட்டத்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


