

ஹவாலா மோசடியில் இருந்து வெளியே வந்த அத்வானியைப் போல, அருண் ஜேட்லியும், ஊழல் புகாரில் இருந்து விடுபட்டு புதிய எழுச்சியோடு வெளியே வருவார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தில்லி கிரிக்கெட் வாரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரஸ் செய்து வரும் அமளியால், நாடாளுமன்ற அவைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து அத்வானி மீண்டு வந்ததைப் போலவே, தில்லி கிரிக்கெட் ஊழல் முறைகேட்டுப் புகாரில் இருந்து அருண் ஜேட்லி மீண்டு, புதிய எழுச்சியோடு வெளியே வருவார் என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது திட்டமிட்டே அவதூறுப் புகார்களைப் பரப்பி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.