தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Updated On :22 டிசம்பர் 2015, 7:19 am

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால், குமார் விஸ்வாஸ், ஆசுதோஷ், சஞ்சய் சிங், ராகவ் சதா, தீபக் ராஜ்பாய் ஆகியோர், அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள மனு மீது 2016ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 6 பேர் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது நற்பெயருக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் களங்கம் விளைத்ததாகவும், அதற்கு இழப்பீடாக ரூ.10 கோடியை அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தவிர, தில்லி பாட்டியலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கையும் அருண் ஜேட்லி தொடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.