ஐ.எஸ்.இயக்கத்தில் சேருவதற்காக சென்ற 3 இளைஞர்கள் கைது

சிரியா நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக ஹைதரபாத்தில் இருந்த புறப்பட்ட 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
ஐ.எஸ்.இயக்கத்தில் சேருவதற்காக சென்ற 3 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

சிரியா நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக ஹைதரபாத்தில் இருந்த புறப்பட்ட 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், தெலுங்கான காவல் துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது, நாகபுரி சர்வதேச விமான நிலையத்திலிருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயகக்தில் சேரும் நோக்கத்தில் ஸ்ரீநகர் புறப்பட்டு செல்லவிருந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் தெலுங்கானா காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஹைதரபாத் ஹூமாயூன் நகரைச் சேர்ந்த அவர்கள் சில நாள்களுக்கு முன்பு காணாமல் போயினர். பின்னர் அவர்கள் நேற்று ஹைதராபாத்திலிருந்து நாக்பூர் வந்து சேர்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com