மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லி குற்றவாளி: மும்பை நீதிமன்றம்

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் அமெரிக்க சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லி முக்கிய பங்காற்றியுள்ளார். அவரை அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்காக விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லி குற்றவாளி: மும்பை நீதிமன்றம்
Updated on
1 min read

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் அமெரிக்க சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லி முக்கிய பங்காற்றியுள்ளார். அவரை அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்காக விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் உள்ளார்.

கடந்த நவம்பர் 26, 2008 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயமடைந்தனர்.

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லியும் பாகிஸ்தானைச் சேர்ந்த சையது சாபுதீன் அன்சாரி என்ற அபு ஜிந்தலும் மூளையாக செயல்பட்டு, மும்பை தாக்குதலை நிறைவேற்றியுள்ளனர்.

அமெரிக்க அரசிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். எனவே, அவரையும் மும்பை தாக்குதல் வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் என மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், டேவிட் ஹெட்லி மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரை வருகிற டிசம்பர் 10ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர் படுத்த வேண்டும். இதுதொடர்பான அழைப்பாணையும் அவருக்கு அனுப்ப உத்தரவிட்டது.

மும்பை தாக்குதலின் போது உயிருடன் பிடிப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மல் கசாப் கடந்த 2012 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com