இருக்கை மாற்றம்: முதியவருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வேக்கு உத்தரவு

உறுதிசெய்யப்பட்ட இருக்கையை மாற்றியது தொடர்பாக மத்திய ரயில்வே நிர்வாகம் முதியவருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், தானே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருக்கை மாற்றம்: முதியவருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வேக்கு உத்தரவு
Updated on
1 min read

உறுதிசெய்யப்பட்ட இருக்கையை மாற்றியது தொடர்பாக மத்திய ரயில்வே நிர்வாகம் முதியவர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், தானே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தானேவில் உள்ள வடவாலியைச் சேர்ந்தவர் பூரண்சிங் மெஹ்ரா. மூத்த குடிமகனான இவர், 2011 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி கல்யானிலிருந்து பரேலி செல்வதற்காக, பிப்ரவரி 8 ஆம் தேதி டிக்கெட் முன் பதிவு செய்தார். அவருக்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி. இருக்கை (பி-2, 60) உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பயண தேதியன்று, கல்யாண் ரயில் நிலையத்துக்கு மெஹ்ரா வந்தபோது, இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியான பி-1 ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பி-2 பெட்டி எஞ்சினிலிருந்து 14-வது பெட்டியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பி-2 பெட்டிக்கு சென்ற மெஹ்ரா, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். ரயில் பயணத்தின்போது, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், மெஹ்ராவுக்கு ஏ.சி. இரண்டாம் வகுப்பு படுக்கையில் இடம் இல்லை என்றும். அவர் பயணம் செய்ய வேண்டிய பி-2 ஏ.சி. பெட்டிக்கு பதில் இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும், இரண்டாம் வகுப்பு செல்ல இயலாத மெஹ்ரா, தனது பயணம் முழுவதும் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்.

இதுகுறித்து அவர் ரயில் நிர்வாக்குத்து புகார் அளித்தும், நடவடிககை ஏதும் இல்லாததால், அவர் தானே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய ரயில்வே நிர்வாகம் முதியவர் மெஹ்ராவுக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com