132 அடியை எட்டியது பாபநாசம் அணை!
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 132 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீ்ர்மட்டம் 90 அடியாகவும் உயர்ந்துள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 132 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீ்ர்மட்டம் 90 அடியாகவும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. 153 அடி கொள்ளளவு சேர்வலாறு அணை நிரம்பியது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 131.75 அடியாக உயர்ந்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தது. கடந்த 2 தினங்களாக மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 3500 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1200 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
இதேபோல், கடனாநதி அணைக்கு 248.74 கனஅடி, ராமநதி அணைக்கு 35 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 100 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 28 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 32 கனஅடி, நம்பியாறு அணைக்கு 240 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 22 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, நம்பியாறு, அடவிநயினார் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 131.75 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.23 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 83, ராமநதி அணையின் நீர்மட்டம் 82, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.86 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 40.25 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132.22 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 48.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...