ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

மும்பையில் இறைச்சி விற்பனை மீதான தடைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து,

Published On :

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து, மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப்
 வி. மோட்டா, அம்ஜத் சையது ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
 மும்பையில் வரும் 17ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி விதித்திருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்காலத் தடையானது, மும்பை நகர் பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.
 ஏனெனில், மும்பையைப் போன்று மிரா-பயந்தர், நவி மும்பை மாநகராட்சிகளிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த யாரும் அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை.
 ஆகையால், அங்கு இறைச்சி விற்பனை செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது.
 அதேசமயம், மும்பையில் வரும் 17ஆம் தேதியன்று ஆடு, கோழிகள் உள்ளிட்டவற்றைக் கொல்வதற்கும், அவற்றைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் இடங்களை மூடுவதற்கும் விதிக்கப்பட்ட தடைகளில் நீதிமன்றம் தலையிடாது.
 இறைச்சி விற்பனை உள்ளிட்டவை மீது 2 நாள்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக கடந்த 2004ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு விதிகளைக் கொண்டு வந்தது. ஆனால் அதை மகாராஷ்டிர அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. இந்நிலையில், அந்தத் தடையை 4 நாள்களாக நீடித்தது ஏன்?
 இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சட்டத்துக்கு உள்பட்டே நீதிமன்றத்தால் செயல்பட முடியும். நம்பிக்கைகள், அரசியல் சிந்தனைகளுடன் நீதிமன்றம் செயல்படாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 அதேசமயம், வன்முறை கூடாது என்று வலியுறுத்தும் ஜைன மதத்தினருக்காக ஆடு, கோழி இறைச்சிகளுக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, மீன்கள், முட்டைகளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 மேலும், வழக்கின் மீதான அடுத்த விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
 வழக்கின் பின்னணி: ஜைன மதத்தினரால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் "பர்யுஷன்' எனப்படும் விரத காலத்தை முன்னிட்டு, மும்பையில் இம்மாதம் 10,13,17,18 ஆகிய 4 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்கும், ஆடு, கோழி உள்ளிட்டவற்றைக் கொல்வதற்கும், அவற்றை கொல்ல பயன்படுத்தப்படும் இடத்துக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
 இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் விதிக்கப்பட்ட தடையை மும்பை மாநகராட்சி விலக்கிக் கொண்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.