ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

மோடியின் சிலிகான் வேலி பயணம்: அமெரிக்காவில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு; அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா

அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களின் மையமான சிலிகான் வேலிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில்,

Published On :

அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களின் மையமான சிலிகான் வேலிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது வருகையை அமெரிக்கர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளதாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா தெரிவித்தார்.
 இதுதொடர்பாக, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
 அமெரிக்காவிலுள்ள சிலிகான் வேலிக்கு மோடி வருகை தரவிருப்பது, அங்கு பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
 இந்தப் பயணத்தின் மூலம், இந்தியாவில் நவீன நகரங்கள் உருவாக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற திட்டங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட புதிய வாய்ப்புகள் திறந்து விடப்படும்.
 அமெரிக்காவில் அதிகமான முதலீடு செய்துள்ள இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில், சுமார் 85 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கி வந்தன. தற்போது, 200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அங்கு இயங்கி வருகின்றன.
 அமெரிக்காவில் சுமார் 1,500 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 99,540 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளதாகவும், இதன்மூலம் அங்கு 91,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதேபோல், இந்தியாவில் அமெரிக்கா மேற்கொண்ட முதலீட்டின் அளவும் அதிகரித்து வருகிறது.
 கடந்த 2004-ஆம் ஆண்டில், சுமார் ரூ. 51,000 கோடியாக இருந்த அமெரிக்க முதலீடுகள், தற்போது ரூ. 1,85,000 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், தற்போது 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார் ரிச்சர்டு வர்மா.
 ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, வரும் 27-ஆம் தேதி சிலிகான் வேலிக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.