ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மேகாலயத்தின் நீண்டகால எம்எல்ஏ மறைவு

மேகாலய மாநிலத்தில் செயல்படும் மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஹோப்பிங் ஸ்டோன் லிங்க்தோ (86) சனிக்கிழமை காலமானார்.

Published On :

மேகாலய மாநிலத்தில் செயல்படும் மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஹோப்பிங் ஸ்டோன் லிங்க்தோ (86) சனிக்கிழமை காலமானார்.

கடந்த 1972-ஆம் ஆண்டு உதயமான மேகாலய மாநிலத்தில் இதுவரை தோல்வியே கண்டிராத மூத்த எம்எல்ஏ ஹோப்பிங் ஆவார். யுரேனிய சுரங்கங்களுக்கு எதிராக தனியொரு நபராய் மிகப் பெரிய அளவிலான பிரசாரங்களை மேற்கொண்டதால் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக உயர்ந்தவர் அவர்.

ஹோப்பிங்கிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், நிமோனியா காய்ச்சல், வயோதிகம் சார்ந்த பிரச்னைகளாளும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ஹோப்பிங்கின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு மேகாலய முதல்வர் முகுல் சங்மா, சட்டப்பேரவைத் தலைவர் டி.மொண்டல், எதிர்க்கட்சித் தலைவர் தோங்கூபர் ராய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.