ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: துப்பாக்கிமுனையில் பேருந்து பயணிகளிடம் கொள்ளை

உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

Updated On :1 ஆகஸ்ட் 2016, 10:23 am

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ஹமிர்புர் சென்று கொண்டிருந்த பேருந்தை 8 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் ஏறியது. அதில் இரண்டு பேர் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டுநரை தாங்கள் குறிப்பிடும் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கூறினர்.

அதே நேரத்தில், மற்ற 6 பேரும் பயணிகளிடம் இருந்து பணம், விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.