இன்று முதல் ஹிந்தியிலும் வருகிறது கூகுளின் 'அல்லோ'!
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள உடனடி தகவல் பரிமாற்ற செயலியான ' அல்லோ ' இன்று முதல் ஹிந்தி மொழியிலும் தனது சேவையை அறிமுகப்படுத்துகிறது.


புதுதில்லி: கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள உடனடி தகவல் பரிமாற்ற செயலியான 'அல்லோ' இன்று முதல் ஹிந்தி மொழியிலும் தனது சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப் பெரும் புகழ் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக கூகுள் 'அல்லோ' என்னும் தகவல் பரிமாற்ற செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்தியாவில் இன்னும் பரவலாக வாடிக்கையாளர்களை சென்றடையும் பொருட்டு ஹிந்தியில் 'அல்லோ' தற்போது அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. அல்லோவின் 'கூகுள் அசிஸ்டென்ட்' மற்றும் 'ஸ்மார்ட் ரெடி' ஆகிய பகுதிகளில் தற்போது ஹிந்தி மொழி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட 'அல்லோ' செயலியானது விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் கருவிகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...