பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நாட்டின் முதல் 'இந்திய திறன் கழகம்': பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்!

இந்தியாவை மனித திறன் தலைநகரமாக உருவாக்கும் தனது எண்ணத்தை செயலாக்கும் விதமாக, உத்தரபிரதேசத்தில் நாட்டின் முதல் 'இந்திய திறன் கழகத்திற்கு' பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:57 pm

கான்பூர்: இந்தியாவை மனித திறன் தலைநகரமாக உருவாக்கும் தனது எண்ணத்தை செயலாக்கும் விதமாக, உத்தரபிரதேசத்தில் நாட்டின் முதல் 'இந்திய திறன் கழகத்திற்கு' பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டவுடன் சிங்கப்பூருக்கு பயணம் சென்ற மோடி, அங்குள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தை கண்டு, அதன் அடிப்படையில் அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க எண்ணினார்.  அதன் அடிப்படையிலேயே தற்பொழுது கான்பூரில் இந்திய திறன் கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சரகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய தொழில் நுட்ப கழகத்துடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது. இதே போல் மேலும் இந்தியாவெங்கும் ஆறு கழகங்களை உருவாக்க அமைச்சரகம் திட்டமிடப்பட்டுள்ளது,

மேலும் உத்தரபிரதேச இளைஞர்களுக்கான திறன் கண்காட்சி ஒன்றையும் மோடி இன்று துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.