ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்களும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
''சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் முடிவு மிகவும் சோகமான உள்ளது. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களை வணங்குகிறேன். தேசமே அவர்கள் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவிக்கிறது'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஒர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் நேற்று காலை சியாச்சின் பகுதியில் (19,600 அடி உயரத்தில்) ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
புதையுண்ட அவர்களை இரண்டாவது நாளாக இன்றும் பனியில் தீவிரமாக நடைபெற்றது. அப்பகுதியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், மாலை வரை எவ்வித முன்னேற்றமுமில்லை.
இந்நிலையில் வடக்கு காமாண்டன்ட் பிரிவின் காமாண்டர் வெளியிட்டுள்ள செய்தியில், இது ஒரு சோக நிகழ்வு, நமது எல்லைகளை பாதுகாக்கும் முயற்சியில் தங்களது உயிரையும் தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ வீரர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என கூறப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.