மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்புள்ள தங்கம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, மூன்று பயணிகள் வைத்திருந்த பைகளில் வெளிநாட்டு சின்னம் பொறிக்கப்பட்டிருந்த 58 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் 9.65 கிலோ எடையுள்ள இந்த தங்கக் கட்டிகளை, மியான்மரில் இருந்து கடத்தி வந்ததை மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.