பெங்களூரு பள்ளியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விப்ஜியார் தனியார் பள்ளி.
இப்பள்ளி வளாகத்தில் கடந்த 7 ஆம் தேதி சுற்றி திரிந்த சிறுத்தையை கண்ட காவலாளி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியின் போது 3 வனத்துறை அலுவலர்களும், ஒரு மருத்துவரும் காயமடைந்தனர். சுமார் 14 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி அளிக்கப்பட்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே பள்ளியில் மீண்டும் நேற்று இரவு சிறுத்தை சுற்றி திரிந்துள்ளது. சிறுத்தையை இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிலர் பார்த்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சிலர் பள்ளியில் இரண்டு சிறுத்தைகள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிப்பது கடினமாக இருக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே அந்த தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


