மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹெட்லியின் வாக்குமூலம் பதிவு மீண்டும் தொடங்கியது

பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் காணொளி மூலம் நடைபெற்று வரும் விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2016, 2:34 am

பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் காணொளி மூலம் நடைபெற்று வரும் விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது.

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி கைது செய்து செய்யப்பட்ட அமெரிக்காவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்தபடி காணொளி மூலம் மும்பை நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமுலம் அளித்து வருகிறார்.

கடந்த சில நாள்களாக வாக்கு மூலம் அளித்து வந்த நிலையில், நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது வாக்கு மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஹெட்லியிடம் வாக்குமூலம் பதிவு செய்வது இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.

முன்னதாக அவர் அளித்த வாக்குமூலத்தில், தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் இதுவரை 8 முறை இந்தியா வந்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும் 2008 நவம்பர் 26ம் தேதி மும்பை தாக்குதலுக்கு முன்பு 7 முறை உளவு பார்க்கவும், தாக்குதல் நடத்த பிறகு ஒரு முறையும் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளார்.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஹேட்லி அமெரிக்காவில் 35 ஆண்டு கால சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.