தில்லியில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து, இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர். இதையடுத்து மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவர் தில்லி பெருநகர நீதிபதி லோவ்லீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட விடியோ பதிவையும் தாக்கல் செய்தனர்.
''நான் இந்தியாவுக்கு எதிராக எவ்வித கோஷமும் எழுப்பவில்லை. மேலும், இந்திய ஒற்றுமைக்கு எதிராகவும் பேசவில்லை. நான் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பவன்'' என கண்ணையா குமார் விசாரணையின் போது கூறினார்.
மேலும், மாணவர் தேர்தலில் ஏபிவிபி அமைப்பை தோற்கடித்த காரணத்தால் தன் மீது அரசியல் ரீதியாக பழிசுமத்தும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளப்படுத்த முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், பல்கலைக்கழக மாணவர்களை மட்டுமே தன்னால் அடையாளம் காண முடியும். வெளியே இருந்து வந்தவர்களை தன்னாள் அடையாளம் காட்ட முடியாது என்றார்.
பின்னர் அவரை மூன்று நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கண்ணையா குமார் தவிர மேலும் 5 பேர் மீதும் தேச துரோகம் மற்றும் குற்ற சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

