மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காணாமல் போன மாணவியின் சடலம், உ.பி. முதல்வரின் வீட்டருகே மீட்பு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் உடல், கவுதம்பள்ளியில் உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

Updated On :15 பிப்ரவரி 2016, 11:05 am

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் உடல், கவுதம்பள்ளியில் உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

ஜானகிபுரத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகளை 10ம் தேதி முதல் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு மிக அருகே, கல்லெறி தூரத்தில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகம் கொண்ட பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மாணவி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த விசாரணையை, காவல்துறை டிஜிபி ஜாவேத் அகமது நேரடியாக மேற்பார்வை செய்யுமாறு முதல்வர் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.