மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூரு: பள்ளியில் பிடிப்பட்ட சிறுத்தை தப்பி ஓட்டம்

பெங்களூருவில் தனியார் பள்ளியில் கடந்த வாரம் பிடிப்பட்ட சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2016, 10:44 am

பெங்களூருவில் தனியார் பள்ளியில் கடந்த வாரம் பிடிப்பட்ட சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில் சுற்றி திரிந்த சிறுத்தை கடந்த வாரம் கடும் போராட்டத்துக்குப் பின் பிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது 3 பேர் படுகாயமடைந்தனர். பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னிர்கட்ட உயிரியியல் பூங்காவில் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் பூங்காவிலிருந்து நேற்று இரவு புலி தப்பியோடிவிட்டது.

புலி தப்பி ஓடின சம்பவம் இன்று காலையே தெரியவந்தது. விசாரணைக்குப் பின் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் சித்தாராமையா, புலி தப்பி ஓடினது குறித்து வனத்துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.