ஆந்திர மாநிலத்துக்கான தாற்காலிக தலைமைச் செயலகம்: சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

ஆந்திர மாநிலத்துக்கான தாற்காலிக தலைமைச் செயலகம் கட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலத்துக்கான தாற்காலிக தலைமைச் செயலகம்: சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்துக்கான தாற்காலிக தலைமைச் செயலகம் கட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் வேலகப்புடி அருகே குண்டூர் கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில், தாற்காலிக தலைமைச் செயலகக் கட்டத்துக்கான அடிக்கல்லை, இன்று காலை 8.23 மணியளவில் சுபமூகூர்த்தத்தில் சந்திரபாபு நாயுடு நாட்டினார்.

28 ஏக்கர் பரப்பளவில், சுமார் ஆறு லட்சம் சதுர அடியில் இந்த கட்டடம் அமைய உள்ளது. இந்த கட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரும் பணியும் துவங்கியதுள்ளது.

இப்பணிகள் வரும் ஜூன் மாதம் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com