1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகளுடன் 'ஆதார்ஷ்' நிலையங்களாக்கப்படும்: சுரேஷ் பிரபு

நாடு முழுவதும் உள்ள 1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகள் நிறைந்த 'ஆதார்ஷ்' நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள 1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகள் நிறைந்த 'ஆதார்ஷ்' நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், ரயில் நிலையங்களை அடிப்படை வசதிகள் நிறைந்த நிலையங்களாக மாற்றும் 'ஆதார்ஷ்' திட்டம் கடந்த 2009-10 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை 1052 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 946 நிலையங்களில் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மேலும் அந்த ரயில் நிலையங்களில் பயணிகளின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பட வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஆதார்ஷ் திட்டம் ரயில்வே மண்டல அளவிலும், ரயில்வே போர்டு அளவிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கான செலவு 'பயணிகளுக்கான வசதிகள்' என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com