புது தில்லி: பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிய விவகாரத்தில், அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பிகாரில் பயிர்களை நாசம் செய்து வந்த "நீல்கய்' வகை மான்கள் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பிகாரில் "நீல்கய்' மான்கள் கொல்லப்பட்டது, மிகப்பெரிய படுகொலைச் சம்பவமாகும். வனவிலங்குகளைக் கொல்ல மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பிகாரில் "நீல்கய்', மேற்கு வங்கத்தில் யானைகள், ஹிமாசலப் பிரதேசத்தில் குரங்குகள், கோவாவில் மயில்கள், மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூரில் காட்டுப் பன்றிகள் ஆகிய வனவிலங்குகளைக் கொல்ல சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பிகாரைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட கிராமத்தின் தலைவரோ, விவசாயிகளோ கூட "நீல்கய்' மான்களை கொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. சந்திராபூரில் இதுவரை 53 காட்டுப் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் 50 காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது என்றார் மேனகா காந்தி.
ஜாவடேகர் விளக்கம்: இதனிடையே மேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
வனவிலங்குகளால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், பயிர்கள் நாசமாவதாகவும் கூறி, அவற்றை கொல்வதற்கு மாநில அரசுகள் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரின. அதன் அடிப்படையில்தான், குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வனவிலங்குகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வனவிலங்குகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுவதற்காக அறிவியல்பூர்வமாக கையாளப்படும் முறையும் அதுதான்.
தற்போதுள்ள சட்டத்தின்படியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர, அதுவொன்றும் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டமல்ல என்றார் ஜாவடேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


