நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஷீனா போரா வழக்கில் திடீர் திருப்பம்: சாட்சியாக மாறிய கார் ஓட்டுநருக்கு பொது மன்னிப்பு

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.

News image
Updated On :20 ஜூன் 2016, 10:58 am

மும்பை: மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.

ஷீனா போரா கொலை வழக்கில் சாட்சியாக மாறுவதற்கும், தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் ஷியாம்வர் ரவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ தரப்பு ஏற்கனவே அனுமதி அளித்தது.

இந்நிலையில், ஷியாம்ரவி சாட்சியமாக மாறுவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.மகாஜன் அனுமதி அளித்தார். மேலும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.