குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ரூ. 251 விலையில் ஃப்ரீடம் என்ற பெயரில் 'ஸ்மார்ட் போன்' வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து போட்டிப் போட்டுக் கொண்டு கோடிக்கணக்கானோர் மலிவு விலை போனை பெறுவதற்காக முன்பதிவு செய்தனர். மேலும், பலர் பணமும் செலுத்தினர்.
வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தனியான ஒரு கணக்கில் வரவு வைத்திருந்தது.
இந்நிலையில் அந்தப் பணத்தையெல்லாம் திரும்ப அளிப்பதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் அசோக் சதாதா அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் அவரவர் கணக்கில் இந்த வார இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என்றும் அசோக் கூறினார்.
குறைந்த விலை போனை பெறுவதற்காக இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இனி, போனுக்காக வாடிக்கையாளர்களிடம் பணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பொருளைப் பெற்றுக் கொண்டப் பின்னரே பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மட்டுமே போன் விற்பனை செய்யப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குநர் மோகித் கோயல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


