தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில்வே துறையின் இணையதளத்தை 'ஹேக்' செய்த அல்-கொய்தா

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

News image
Updated On :2 மார்ச் 2016, 5:24 am

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

இந்திய ரயில்வேயின் மத்திய மண்டலம் சார்பில் நிர்வாக மேலாண்மைக்காக ரயில்வே துறைகளுக்கு இடையேயான தகவல்களை பறிமாரி கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்துக்குள் புகுந்த அல்-கொய்தா தீவிரவாதிகள், அதை சிறிது நேரம் முடக்கினர். அவர்கள் `உங்கள் பெருங்கடலில் ஏன் ஒரு புயலும் இல்லை? மௌலானா அஸீம் உமரிடமிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு செய்தி' என்ற வாசகத்தை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், 11 பக்கங்கள் கொண்ட ஒர் அறிக்கையையும் இணைத்திருந்தனர்.

உத்ர பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அஸீம் உமர் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.