சிவராத்திரியின் போது பயங்கர தாக்குதல் நடத்தும் வகையில் 10 பயங்கரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுறுவியுள்ளதாக உளவுத் துறை அறிவித்துள்ளதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்ற அனைத்து போலீஸாரும் உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
மகா சிவாராத்ரி நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கட்ச் பகுதியில் இன்று காலை தீவிர சோதனை நடத்தப்பட்டது. பூஜ் பகுதியில் உள்ள நூரணி மகேல் மற்றும் முஸ்லிம் ஜமாத் பகுதியிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
குஜராத் மாநிலத்துக்குள் பயங்கரவாதிகள் நுழைநதுள்ளதாக மத்திய அரசிடமிருந்து தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எத்தகைய தாக்குதல் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநில உள்துறை அமைச்சர் ரஜினி பட்டேல் கூறினார்.
நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படவிருக்கும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சோம்நாத் உள்ளிட்ட கோயில்கள் கூடுவர். இதையடுத்து இக்கோயில்களுக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு அணிகள் தில்லியிலிருந்து குஜராத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இன்று காலை முதலை குஜராத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையோர பகுதியில், குறிப்பாக பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களான சோம்நாத் கோயில், துவராகா கோயில் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் அமைந்துள்ள இடங்கள், சர்தார் சர்வோர் அணை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு கட்ச் வளைகுடா பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு படகு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் படகிலிருந்து எவ்வித சந்தேகத்துக்கு இடமான பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


