மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
Updated on
1 min read

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பூமிக்கு கீழே 8 கிமீ ஆழத்தில் உருவான நிலநடுக்கம் முதலில் 3.16 மணிக்கு நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.

இதைத்தொடர்ந்து 4 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கும் 9 கிமீ ஆழத்தில் நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 பதிவானது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதி நிலநடுக்கப் பகுதிக்குள் வருவதால் இதுபோன்ற குறுகிய கால இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்படுவதாக தேசிய நிலநடுக்கவியல் துறை தலைவர் ஜே.எல்.கௌதம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com