தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு: மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Updated On :11 மார்ச் 2016, 7:13 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், சாலையோரப் பகுதிகளை ஆய்வு செய்த ராணுவ வீரர்கள், ஸ்ரீநகரின் நௌகாம் என்ற பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்தனர். அதனை செயலிழக்க வைக்கும் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

இப்பகுதி சாலை ராணுவ வீரர்களால் அதிகமாகப் பயன்படுத்தும் சாலை என்பதால், ராணுவத்தை குறி வைத்தே இந்த கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதாகவும், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.