தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரஷ்யாவில் பலியான கேரள தம்பதி: அடையாளம் காண ரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2016, 12:29 pm

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் மோகன் மற்றும் அவரது மனைவி அஞ்சுவின் உடல்களை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரபணு சோதனைக்காக, மோகனின் பெற்றோரிடம் இருந்தும், அஞ்சுவின் தாய் மற்றும் சகோதரரிடம் இருந்தும் மருத்துவக் குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்ததாக நெருங்கிய உறவினர் ஒருவர் கூறினார்.

ஃப்ளை துபாய் போயிங் 737 ரக விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்திய தம்பதியரான மோகன் - அஞ்சு உள்ளிட்ட 62 பேர் உயிரிழந்தனர்.

மோகனும் அஞ்சுவும் ரஷ்யாவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் என்பதும், இரண்டு மாத விடுமுறைக்குப் பின் கடந்த வியாழக்கிழமைதான் இவர்கள் கொச்சியில் இருந்து ரஷ்யா திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.