டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

போபால் போலி என்கவுண்டரில் தொடர்புடைய எல்லாரையும் தூக்குல போடுங்க: கொந்தளித்த முன்னாள் நீதிபதி கட்ஜூ! 

போபாலில் சிறையில் இருந்து தப்பித்த 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுண்ட்டர் போலி என்றும், இதில் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்... 

News image
Updated On :1 நவம்பர் 2016, 12:50 pm

புதுதில்லி: போபாலில் சிறையில் இருந்து தப்பித்த 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுண்ட்டர் போலி என்றும், இதில் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8 சிமி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் தப்பிய அனைவரும் நேற்று மாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக காவல்துறை அறிவித்தது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தன்னுடைய சமூக  வலைத்தள பக்கத்தில், 'எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி கண்டிப்பாக இது போலி என்கவுண்ட்டர்தான்.   இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.