பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசலா ? இந்திய விஞ்ஞானிகள் புதிய தகவல்!

பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசலா ? இந்திய விஞ்ஞானிகள் புதிய தகவல்!

விண்வெளியில் இருந்து அதிகளவில் நிகழ்ந்த காஸ்மிக் கதிர்களின்  வெளியேற்றம் காரணமாக,பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஊட்டி: விண்வெளியில் இருந்து அதிகளவில் நிகழ்ந்த காஸ்மிக் கதிர்களின்  வெளியேற்றம் காரணமாக பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஊட்டியில் காஸ்மிக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் 'டாடா இன்ஸ்டியூட்டில் காஸ்மிக் கதிர் ஆய்வகம்' அமைந்துள்ளது.  இது இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மைமாகும். இந்த மையத்தில் அமைந்துள்ள கருவிகளில் பதிவான தகவல்களின் மூலமாகத்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அங்குள்ள ஆய்வாளர்கள்  தரும் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்ற அளவில் வெளியேறியுள்ளது. அப்பொழுது உண்டான அதிர்வில் இந்த மேகம் போன்ற அமைப்பானது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது.  இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு அதிக அளவில் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது.  இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் வெளியேறியுள்ளது.  இந்த வெளியேற்றத்தின் காரணமாக பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசல் உண்டாகியிருப்பதற்கான அடையாளங்கள் அங்குள்ள கருவிகளில் பதிவாகியுள்ளது என்ற விபரம் தற்போது தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com