ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உ.பி.: போர் விமானம் தரையிறங்கும் வகையிலான நவீன சாலை திறப்பு

ஆக்ரா - லக்னெள விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடக்க விழா உத்தரப் பிரதேச மாநிலம், உன்னூவ் மாவட்டம் பங்கர்மெளவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 வழி விரைவு நெடுஞ்சாலை தொடக்க விழாவில், சாலையைத் தொட்டு விட்டு பறந்து செல்லும் போர் விமானம். நாள்: திங்கள்கிழமை.
Updated On :21 நவம்பர் 2016, 6:24 pm

DIN

ஆக்ரா - லக்னெள விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் தொடக்க விழா உத்தரப் பிரதேச மாநிலம், உன்னூவ் மாவட்டம் பங்கர்மெளவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 6 போர் விமானங்கள் அந்த நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டு மீண்டும் விண்ணில் பறந்து சென்றன.
லக்னெளவில் இருந்து தில்லி வரை 302 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழி விரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்த நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைய உள்ளது.
மேலும், போர்ச் சூழல்களிலும், அவசர காலங்களிலும் இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் விமானங்களைத் தரையிறக்க முடியும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சாலைத் திட்டத்தின் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, அந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 3 மிராஜ்-2000 ரக ஜெட் விமானங்களும், 3 சுகோய்-30 ஜெட் விமானங்களும் அந்த நெடுஞ்சாலையின் தரையைத் தொட்டுவிட்டு பறந்து சென்றன. விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டமாக இது கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.