புதுதில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்றத் தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர்கள் ஆஷிஷ் கேதான் மற்றும் திலிப் பாண்டே ஆகிய இருவரும் தெரிவித்ததாவது:
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரு முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்காக அல்ல.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளோம். தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இந்த பேரணிக்கு தலைமை தாங்க உள்ளார்.
விரைவில் சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருக்கும்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீரட் , லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி திருவிழா!
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


