அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

ஒடிசாவில் வங்கியில் எலும்புக் கூடுடன் பணமெடுக்கச் சென்ற நபரால் பரபரப்பு

News image

வங்கிக்கு எலும்புக் கூட்டுடன் சென்றதால் பரபரப்பு

Updated On :28 ஏப்ரல் 2026, 3:39 pm IST

ஒடிசாவில் வங்கியில் எலும்புக் கூடுடன் பழங்குடி நபர் பணமெடுக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் மல்லிபாஷியில் ஜீது முந்தா (42) என்பவர், மறைந்த சகோதரியான கலா முந்தாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக ஒடிசா கிராமிய வங்கிக்குச் சென்றுள்ளார்.

ஆனால், தனது சகோதரி இறந்ததை வங்கியில் ஜீது கூறாத நிலையில், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணம் தரப்படும் என வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். தொடர்ந்து, மூன்று முறை ஜீதுவுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதனையடுத்து, தங்களின் வீட்டருகே புதைக்கப்பட்டிருந்த கலாவின் உடலைத் தோண்டியெடுத்து, எலும்புக் கூட்டுடன் வங்கியில் பணத்தை எடுக்க ஜீது சென்றுள்ளார்.

எலும்புக் கூட்டுடன் ஜீது வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கலாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஜீதுவுக்கு தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக வங்கி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, ஜீது மீண்டும் எலும்புக் கூட்டை எடுத்துச் சென்றார்.

மேலும், தோண்டியெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் எலும்புக் கூட்டை ஜீது புதைத்தார்.

Summary

Odisha man reaches bank with sister’s exhumed body to claim money

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.