டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கும் தேதி மாற்றம்!

நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:58 am

DIN

புதுதில்லி: நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதெற்கென தனி மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்குபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

அதில் இன்னும் சில அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால் அக்கூட்டம் நாளை மறுநாள்  (25-ஆம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த கூட்டமானது அடுத்த மாதம் 2 மற்றும் 3- ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், மீதமுள்ள அம்சங்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.