பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ 24 மணி நேரத்துக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:48 pm


புது தில்லி: பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ 24 மணி நேரத்துக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை சீருடையில் வந்த 10 பேர் நபா சிறைச் சாலையை தகர்த்து, ஹர்மீந்தர் மின்டூ உட்பட 6 சிறைக் கைதிகளை தப்பிக்க வைத்தனர்.
இதில், சிறையை தகர்த்த கும்பலில் ஒருவனை நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவன் காரில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், புது தில்லியில் பதுங்கியிருந்த ஹர்மீந்தர் மின்டூ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சம்பவத்தின் பின்னணி:
பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை தப்பிக்க வைத்தனர்.

இதையடுத்து, சிறைத் துறை டிஜிபி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், காவல் துறை டிஜிபி சுரேஷ் அரோரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
போலீஸ் சீருடை அணிந்து வந்த அந்த இளைஞர் கும்பல், கைதி ஒருவரை சிறைச் சாலைக்கு அழைத்து வந்ததாக காவலர்களிடம் கூறினர். பின்னர், சிறைச் சாலை மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உள்ளே புகுந்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்மீந்தர் மின்டூவையும், 5 குற்றவாளிகளையும் அவர்கள் தப்பிக்க வைத்தனர். காவலர்களும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். எனினும், அவர்களின் பதிலடி கடுமையானதாக இருக்கவில்லை. இதன் பின்னணியில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா? என கண்டறியப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.