மஞ்சேரி: மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின் உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு மஞ்சேரியில் உள்ள நீதிமன்றம் ஒன்று காவலதுறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் காட்டுப்பகுதியில்,கடந்த வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினருடன் நடந்த மோதலில், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வழக்கமான சோதனையின் போது , மாவோயிஸ்ட்டுகளை கண்டறிந்தததாகவும், அவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கியதும்தான் வேறுவழியின்றி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்கவில்லை,. இது காவல்துறையினர் நடத்திய போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டின. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாகவும், அதுவரை இரண்டு உடல்களையும் பாதுகாத்து வைக்குமாறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.உடல்கள் இரண்டும் தற்போது கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


