தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில்  பரவும் வைரஸ்!

கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும்  மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2016, 10:59 am

DIN

புதுதில்லி: கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும்  மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேரினால்  பாதிக்கப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது, அவற்றின் மூலமாக நமது அலைபேசி அல்லது மற்ற கருவிகளில் 'த்ரெட் ஆக்டர்ஸ்கள்' உட்புகுகின்றன. இத்தகைய கருவிகள் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கப்படும் பொழுது, அங்கிருக்கும் உட்புற சர்வர் கணினியை தாக்கும் அல்லது முக்கியமான தகவல்களை திருடும்.

இந்த தகவலை மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான 'ட்ரெண்ட் மைக்ரோ' தெரிவித்துள்ளது.   

கூகிள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக தரவிறக்கப்படும், விளையாட்டுகள், ஸ்கின்ஸ் மற்றும் அலைபேசியை மேம்படுத்த உதவும் பல்வேறு வகையான 'தீம்'கள்  ஆகியவையே இந்த மால்வேரின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.   

செயலியின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இந்த மால்வேர்கள் செயல்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது அத்தனை எளிதானதாக இல்லை. தற்போது பெரும்பாலான அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களின் அலைபேசி மற்றும் டேப்லெட் உள்ளிட்ட கருவிகளை அலுவலக கணினி வலைப்பிபின்னலில் இணைத்து

பயன்படுத்த அனுமதி அளித்து வருவதால், இந்த மால்வேர் தாக்குதலின் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

இது பற்றி 'ட்ரெண்ட் மைக்ரோ' நிறுவனம் கூகிளுக்கு தெரியப்படுத்தி விட்டதால், கூகிள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.