பாகிஸ்தானுடனான எல்லை சீல் வைக்கப்படும் : ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள்முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார்.


புதுதில்லி: பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள்முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது அவர் கூறியாதவது:
பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக சீல் வைக்கப்படும். தேசிய பாதுகாப்பு என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. காஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில் ராஜ்நாத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...