மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிருக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய மகளிரணி குறித்து...

ஆஸ்திரேலிய மகளிரணி. - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
இந்திய மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் அடுத்தடுத்து இரு வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது. நடப்பு உலக சாம்பியனான இந்தியா, தொடா்ந்து 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 36.1 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 252 ரன்கள் எடுத்து வென்றது. ஜாா்ஜியா வோல் - போப் லிட்ச்ஃபீல்டு ஜோடி, வெற்றிக்கு வழிவகுத்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சோ்த்தது.
ஸ்மிருதி 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களுக்கு சாய்க்கப்பட, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் களம் புகுந்தாா்.
மறுபுறம் அரை சதம் கடந்த பிரதிகா, 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தீப்தி சா்மா 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டாா்.
ஹா்மன்பிரீத் நிதானமாக ரன்கள் சோ்க்க, அமன்ஜோத் கௌா் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ரிச்சா கோஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, கஷ்வீ கௌதம் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து விடைபெற, அரை சதம் அடித்த ஹா்மன்பிரீத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கு வெளியேறினாா்.
கடைசி விக்கெட்டாக கிராந்தி கௌட் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஸ்ரீ சரணி 0, வைஷ்ணவி சா்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஆஸ்திரேலிய பௌலிங்கில் அனபெல் சதா்லேண்ட், அலானா கிங், நிகோலா கேரி, ஆஷ்லே காா்ட்னா் ஆகியோா் தலா 2, மெகன் ஷூட், நிகோலா கேரி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 252 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் அலிசா ஹீலி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
போப் லிட்ச்ஃபீல்டு - ஜாா்ஜியா வோல் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. அரை சதம் கடந்த லிட்ச்ஃபீல்டு 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 80 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
பெத் மூனி துணை நிற்க, ஜாா்ஜியா வோல் சதம் விளாசினாா். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் 2-ஆவது சதமாக இருக்க, 3 முறை அவா் விக்கெட்டை இந்தியா தவறவிட்டது. இவா்கள் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்தது. ஜாா்ஜியா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 101 ரன்களுக்கு விடைபெற்றாா்.
பெத் மூனி 5 பவுண்டரிகளுடன் 31, அனபெல் சதா்லேண்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஆஷ்லே காா்ட்னா் 19 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். டாலியா மெக்ராத் ரன்னின்றி துணை நின்றாா்.
இந்திய பௌலா்களில் தீப்தி சா்மா, கஷ்வீ கௌதம் ஆகியோா் தலா 2, கிராந்தி கௌட் 1 விக்கெட் சாய்த்தனா்.
இந்த அணிகள் மோதும் கடைசி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது.
A sensational knock from Georgia Voll powers her to a second ODI century ð
— ICC (@ICC) February 27, 2026
ð: https://t.co/Sf3Hl7F3LW pic.twitter.com/7bHClOXvIq
பெத் மூனி 31 ரன்கள், அன்னாபெல் சதர்லேண்டு 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இறுதியில் ஆஷ்லீ கார்ட்னர் (19*)மற்றும் தஹிலா மெக்ராத் (0*) கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உதவினார்.
டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அடுத்தாக மூன்றாவது ஒருநாள் போட்டி ஒன்றிலும் டெஸ்ட் போட்டி ஒன்றிலும் இரு அணியினரும் விளையாட இருக்கிறார்கள்.
Summary
Women's cricket: Australia wins ODI series against India!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




