பாம்போர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாம்போரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வந்த சண்டையில் 2வது பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் கருதுகின்றனர்.
எனினும், அவர்களது உடலை மீட்ட பிறகே இது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாம்போரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நீடித்து வரும் சண்டை இன்று 3வது நாளை எட்டியுள்ளது.
இந்தச் சண்டையில் நேற்று ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதையும் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை. பாம்போர் பகுதியில் அமைந்துள்ள அரசு கட்டடத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை இன்று 3வது நாளாக நீடிக்கிறது.
இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்போர் பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவன (ஜேகேஇடிஐ) வளாகத்தில் உள்ள விடுதிக்குள் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்தனர். போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தங்கள் வருகையைத் தெரிவிக்கும் நோக்கில், அங்கிருக்கும் படுக்கைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். பாதுகாப்புப் படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது, காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் சண்டை நீடித்தது. ஜேகேஇடிஐ வளாகம் ஜீலம் நதியையொட்டி அமைந்துள்ளது. அதன் வழியாக அந்த நிறுவனத்தின் வளாகத்துக்குள் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், எத்தனை பயங்கரவாதிகள் விடுதிக்குள் இருக்கின்றனர் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. சிறிய வகை ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் எந்த வழியிலும் தப்பி விடாதபடி, பாதுகாப்புப் படையினரால் அந்தக் கட்டடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தக் கட்டடம் சேதமடைந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


